பெற்றோர்கள் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை…! கிருஷ்ணகிரியில் சோகம்..!! - Seithipunal
Seithipunal


பெற்றோர் திட்டியதால் மனமுடைந்து சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கின் காரணாமாக பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தற்போது பள்ளிகள் திறக்கபடாத சூழ்நிலையில் பல மாணவர்கள் பல்வேறு வேலைகளுக்கு சென்று குடும்பத்தின் பொருளாதார தேவையை ஓரளவிற்கு சமாளித்து வருகின்றனர். இதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுவடுவதோடு மன அழுத்ததிற்கும் ஆளாகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவருக்கு மோகன் தாஸ் என்ற மகன் உள்ளார். இவருக்கு வயது 17. இவர் 10 வகுப்பு படித்து விட்டு கூலிவேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மோகன் தாஸ் வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரது பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.

இதனால் மோகன் தாஸ்  மனமுடைந்து இருந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று சிறுவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்துள்ளார். வீட்டிற்கு வந்த பெற்றோர் மயங்கி கிடந்த மகனை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் சிறுவன் உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri School Student Mohan Das Aged 17 Suicide due to Parents Condemn


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal