கிருஷ்ணகிரி பள்ளி மாணவிகள் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அடுத்தடுத்த கைது!  - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த சம்பவம்  வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி  சிவராமன் தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் இந்த வழக்கில் பள்ளி முதல்வர், தாளாளர், ஆசிரியர் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுபோன்று போலி என்சிசி முகாம்கள் நடத்தப்பட்டு மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக புகார்கள் எழுந்தது.

இதனையடுத்து இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்துவரும் நிலையில், போலியாக என்சிசி முகாம் நடத்த உதவிய அரசு பள்ளி என்சிசி ஆசிரியர் கோபு என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சாட்சியங்களை அழித்ததாக நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியும் தற்கொலை செய்து கொண்ட சிவராமனின் நண்பனுமான கருணாகரன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri School girls Abuse case two more arrest


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->