நாமக்கல் பள்ளிபாளையத்தில் நடந்த கிட்னி திருட்டு உறுதியானது - வெளியான விசாரணை அறிக்கை!
kidney theft namakkal
நாமக்கல் பள்ளிபாளையத்தில் நடந்த கிட்னி திருட்டு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில், சிதார் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் என்ற இரு தனியார் மருத்துவமனைகளிலும் முறைகேடாக கிட்னி அகற்றப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளின் அறிவோடு, சட்டப்படி தேவைப்படும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டிருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதனால், இந்த இரண்டு மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டிருந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அனுமதியை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது முழுமையான மற்றும் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.