மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சரின் சகோதரர் கைது!  - Seithipunal
Seithipunal


ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர், கரூரில் இன்று சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது முன்ஜாமின் மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த சேகர் உள்பட இருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். 

வழக்கும், பின்னணியும்:

கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மிரட்டி மோசடியாக பத்திர பதிவு செய்ததாக புகார் அளித்திருந்தார். 

இந்த புகாரின் அடிப்படையில் எம்ஆர் விஜயபாஸ்கர், அவரின் சகோதரர் உள்ளிட்ட ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. 

ஏற்கனவே, இந்த வழக்கில் எம்ஆர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் ஜாமின் வழங்கப்பட்டு வெளியில் இருந்து வருகிறார். 

இந்த நிலையில், அவரின் சகோதரர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணை செய்து நீதிபதி அவருக்கு ஜாமின் வழங்க மறுத்து, அவர் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து தலைமறைவாக இருந்த எம்ஆர் விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் உள்ளிட்ட மூன்று பேர், இன்று சிபிசிஐடி போலீசாரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur MR VijayaBhaskar Brother Arrested


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->