கரூர் திமுக பெண் கவுன்சிலர் கொலையா? ஒரே நாளில் பிணமாக மீட்பு! - Seithipunal
Seithipunal


காணாமல் போன திமுக பெண் கவுன்சிலர், 24 மணிநேரம் கழித்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

கரூர் மாவட்டம், பாலமலை அருகே திமுக பேரூராட்சி கவுன்சிலர் ரூபா தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஈரோடு, சென்னசமுத்திரம் பேரூராட்சி ஏழாவது வார்டு கவுன்சிலரான ரூபா, கடந்த திங்கள் கிழமை முதல் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

ரூபா பரமத்தியில் தங்கி வேலை பார்த்து வந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

அவரின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் அவர் கொலை செய்யப்பட்டாரா?முன் விரோதத்தால் நிகழ்ந்த சம்பவமா? இல்லை குடும்ப பிரச்சினை காரணமாக ஏதேனும் விபரீத முடிவை எடுத்தாரா? என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆளும் கட்சியான திமுகவின் கவுன்சிலர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur DMK Counselor Mystery death case


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->