தமிழக மீனவர்களை தாக்கி கொடுமை செய்த கர்நாடக மீனவர்கள்.. உடந்தையாக காவல்துறை.. சிறையில் தவிக்கும் தமிழர்கள்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சார்ந்த மீனவர்களான அருள்ராஜ், ஜோசப், அருள் சீலன், சுபின், ராபின்சன் உட்பட 10 மீனவர்கள் கடந்த 19ம் தேதியன்று கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வேப்பூர் பகுதிக்கு அருகேயுள்ள ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். 

அந்த சமயத்தில், கர்நாடக மாநிலத்தில் உள்ள கடல் பகுதியில் இருந்து 23 மைல்கள் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கர்நாடக மீனவர்கள், 10 க்கும் மேற்பட்ட படகுகளில் வந்து தமிழக மீனவர்களை தாக்கி பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். 

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கவே, கடலோர காவல்படையினர் தமிழக மீனவர்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்துள்ளனர். தமிழக மீனவர்களை தாக்கிய கர்நாடக மீனவர்களை எந்த கேள்வியும் கேட்காமல் காவல்துறை மற்றும் கடலோர காவல்படை தமிழக மீனவர்களை சிறையில் அடைப்பதிலேயே குறியாக இருந்துள்ளது. 

இவர்கள் அனைவரும் கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி சிறையில் உள்ள நிலையில், தமிழக மீனவர்களை விடுவிக்க நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரிடம் மீனவர்களின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Fishermen attacks Tamilnadu Kanyakumari Fisherman


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->