காதலியை கஷ்டப்பட்டு பணம் கொடுத்து வெளிநாட்டு பணிக்கு அனுப்பிய காதலன்.. கம்பி நீட்டிய சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் அருகேயுள்ள கிராமத்தை சார்ந்த 45 வயது பெண்மணி, தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இந்த பெண்மணியின் கணவர் இறந்துவிட்ட நிலையில், பெண் தனது மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இவரது 26 வயது மூத்த மகள் குவைத்தில், மருத்துவமனை செவிலியராக பணியாற்றி வருகிறார். 

இவர் குவைத்திற்கு செல்வதற்கு முன்னதாக கன்னியாகுமரி மாவட்டத்தின் காட்டுப்புத்தூர் பகுதியை சார்ந்த மர்பின் தனேஷ் (வயது 26) என்ற இளைஞருடன் முகநூல் வாயிலாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில், இருவரும் நெருக்கமாக இருந்த நேரத்தில் மர்பின் தனேஷ் புகைப்படங்கள் எடுத்துள்ளார். 

இருவருமே காதலில் மிதந்து, திருமண கனவில் வாழ்ந்த சூழ்நிலை காரணமாக பெண்ணும் மறுப்பு கூறாமல் இருந்த நிலையில், கடந்த 2019 ஆம் வருடத்தின் ஜூன் மாதத்தில் பெண்ணிற்கு குவைத் நாட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் செவிலியர் பணி கிடைத்துள்ளது. பெண்ணிற்கு குவைத்தில் பணி கிடைத்ததும் மர்பின் தனேஷுடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், மர்பின் தனேஷ் மீது பெண்ணின் தாயார் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துளளார். இது குறித்த புகாரில், மர்பின் தனேஷ் தனது மக்களிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார் என்றும், பணம் கொடுக்க மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் காதலித்த சமயத்தில் எடுத்த புகைப்படத்தை வெளியிடுவேன் என்றும் மிரட்டி வருகிறார். ரூ.5 இலட்சம் பணம் கேட்டு கொலை மிரட்டலும் விடுக்கிறார் என்று புகாரில் கூறியுள்ளார்.

இது குறித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தங்களின் காதல் சம்பவங்களை மர்பின் தனேஷ் கூறியுள்ளார். மேலும், வெளிநாட்டில் பெண்ணிற்கு வேலை கிடைத்த சமாய்த்தில், வெளிநாடு செல்ல பணம் கொடுத்து தான் உதவினேன் என்றும், குவைத்திற்கு சென்ற பின்னர் தன்னுடன் சரிவர பேசாமல் இருந்த நிலையில், குவைத்தில் மற்றொரு நபரை பெண் காதலித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

தற்போது காதலித்து வரும் நபருடன் திருமணம் செய்ய காதலியின் தாய் திட்டமிட்டு வரும் நிலையில், என்னுடன் பழகிய நாட்களில் நான் எடுத்த புகைப்படத்தை வாட்ஸப்பில் அனுப்பி நியாயம் கேட்டேன் என்றும், தன் மீது வன்மம் கொண்டே இந்த புகார் வழங்கப்பட்டுள்ளதாகவும் மர்பின் தனேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். இதன்பின்னர், பெண்ணின் அனுமதி இல்லாமல் வாட்ஸப்பில் புகைப்படம் பகிர்ந்து தொடர்பான வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மர்பின் தனேஷ் கைது செய்ப்பட்டுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanyakumari youngster arrest by police tread his love girl


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->