பெண்கள் கழிவறையில் ரகசிய காமிரா.. சாப்டவேர் கம்பெனி என்ற பெயரில் கொடூரம்.. குமரியில் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியை சார்ந்தவன் சஞ்சு (வயது 29). இவன் தனக்கு சொந்தமாக மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில், இந்த நிறுவனத்தில் 3 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். 

இந்நிலையில், அலுவலகத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இடைவெளி இருந்துள்ளது. இதனை சோதித்தபோது அதில் ரகசிய காமிரா இருந்தது உறுதியானது. இதனையடுத்து பெண்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், விசாரணை செய்ததில் ரகசிய காமிரா இருந்தது உறுதியானது. உடனடியாக சஞ்சுவை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவனிடம் இருந்த லேப்டாப், செல்போனை செய்ததில் அதிலும் ஆபாச படங்கள் இருந்தது உறுதியானது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanyakumari Software Company Bathroom Hidden Camera Owner Sanju Arrest by Police


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->