ஈரான் தலைவர்கள் படுகொலை: "சிந்திய ரத்தத்திற்குப் பழி தீர்க்கப்படும்" - கொந்தளிக்கும் போர் மேகங்கள்!
Iran warns Blood for Blood After Assassinations Middle East on the Brink
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூழ்ந்துள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் மிக உயரிய தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்படுவது, அந்தப் பிராந்தியத்தை ஒரு முழுமையான போரை நோக்கித் தள்ளியுள்ளது.
தலைமைத்துவ இழப்பும் ஈரானின் ஆவேசமும்:
கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரானின் உச்சபட்ச மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட அதிர்ச்சியில் இருந்தே அந்த நாடு இன்னும் மீளவில்லை. இந்நிலையில், ஈரானின் இரண்டாவது சக்திவாய்ந்த தலைவராகக் கருதப்படும் தேசிய பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி (67) இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டது எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியுள்ளது.
தற்போது ஈரானின் புதிய தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள மோஜ்தபா கமேனி, "சிந்திய ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் உரிய முறையில் பழி தீர்க்கப்படும். இந்தத் தியாகிகளைக் கொன்றவர்கள் விரைவில் அதற்கான விலையைக் கொடுப்பார்கள்" என பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
சவூதி அரேபியாவின் எச்சரிக்கை:
மறுபுறம், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கக் கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள சவூதி அரேபியா, ஈரானின் இத்தகைய நடவடிக்கைகள் நிறுத்தப்படாவிட்டால் தாங்களும் போரில் குதிக்க நேரிடும் என எச்சரித்துள்ளது. இது பிராந்திய அமைதிக்குக் கூடுதல் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
English Summary
Iran warns Blood for Blood After Assassinations Middle East on the Brink