சீரியல் பார்த்ததால் சின்னாபின்னமான வீடு... தாம் தூம், டமால் டுமீல்...! 3 இலட்சம் லாஸ்.! - Seithipunal
Seithipunal


தொலைக்காட்சியை அணைக்காமல் விடிய விடிய ஓடி வெடித்துச் சிதறியதால், 3 வீடுகள் தீக்கிரையான சம்பவம் நடைபெற்றுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே குடும்பத்துடன் வசித்து வருபவர் வசந்தகுமார். இவரது வீட்டில் அனைவரும் நேற்று முன்தினம் இரவு சீரியல் பார்த்துவிட்டு, தொலைக்காட்சியை அணைக்காமலேயே அசதியில் தூங்கியுள்ளனர்.

இதனால் நள்ளிரவு முழுவதும் இயங்கிய தொலைக்காட்சி, அதிகளவு சூடாகி திடீரென வெடித்து சிதறி வீடு தீப்பற்றி எரிந்தது. வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவர்கள், வெடிச் சத்தத்தை கேட்டு விழித்த நிலையில், வீட்டில் தொலைக்காட்சி வெடித்து வீடே தீப்பற்றியது தெரியவந்துள்ளது. 

வசந்தகுமார் வீட்டில் பற்றிய தீ, பக்கத்து வீடுகளுக்கும் பரவிய நிலையில், மொத்தமாக 3 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. பின்னர் வீட்டில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேறிய நிலையில், அக்கம்பக்கத்தினர் உதவியோடு தீயை பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அணைத்துள்ளனர்.

இந்த விபத்தில் நல்லவேளையாக தீக்காயம் அல்லது உயிர் சேதம் ஏற்படவில்லை என்றாலும், சுமார் ரூ.3 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளது. மேலும், இரவு நேரத்தில் வீட்டில் தொலைக்காட்சியை பார்த்து விட்டு, அதனை அணைக்காமல் உறங்கினால் எப்படியான விபத்து ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சியாகவும் அமைந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanyakumari Nagarcoil TV Fire Accident due to Long Running Night forgotten switch off TV


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->