மகனுக்கு வலிப்பு நோய்.. தம்பதிகள் எடுத்த விபரீத முடிவால், கண்ணீரில் உறவினர்கள்..! - Seithipunal
Seithipunal


பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் சுண்டபட்டிவிளை பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் அதே பகுதியில் தச்சு தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில், தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். 

இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு அனுஷ்கா என்ற 10 வயது மகளும், விகாஷ் என்ற 4 வயது மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில், கண்ணனின் மகன் விகாஷ் கடந்த சில நாட்களாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதனால், தாய் சரஸ்வதி வேலைக்குச் செல்லாமல் முழுநேரமும் தன் மகனை கவனித்துக்கொள்ள, மகனுக்கு வலிப்பு வரும்போதெல்லாம் பணியைத் துறந்துவிட்டு கண்ணனும் மகனை கவனித்து வந்துள்ளார். சில நேரங்களில் மருத்துமனையில் அனுமதி செய்யப்பட்ட வேண்டிய சூழ்நிலை இருந்த நிலையில், கண்ணனின் வருமானம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. 

மருத்துவ செலவுக்கும் பணம் இல்லாமல் தவித்த நிலையில், தம்பதிகள் குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளது. இதனையடுத்து, நேற்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தம்பதிகள், தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்டுள்ளனர்.

காலையில் வெகு நேரம் ஆகியும் யாரும் வீட்டில் இருந்து வெளியே வராததை கண்டு சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டை திறந்து பார்த்த போது விபரீதம் புரிந்துள்ளது. இதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், மேற்கூறிய சோக தகவல் தெரியவந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari Family Members Suicide due to Poor 17 Feb 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal