நான்கு வரி காதல் பாடலில் துவங்கிய வாழ்க்கை, 30 நாட்களில் கசப்பான சோகம்.. காதல் ஜோடியின் விபரீதம்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கோட்டார் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு (வயது 22). இவர் குறும்படங்களை படம்பிடிக்கும் ஒளிப்பதிவாளராக இருந்து வந்த நிலையில், திருப்பூரை சார்ந்த 20 வயது பெண்மணியான ஷாலினி என்பவருடன் அறிமுகம் கிடைத்துள்ளது. 

இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், விஷ்ணுவின் குறும்படத்தின் மூலமாக இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது. இதனையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டனர். நண்பர்களாக பழகி நேரத்திலும், காதலர்களாக இருந்த போதிலும் சிக்கல் ஏற்படாமல் இருந்த நிலையில், திருமணமான சில நாட்களுக்குள்ளாகவே இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை மீண்டும் இதுபோல தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சாலினி விஷ்ணு கட்டிய தாலியை கழற்றி எறிந்துள்ளதாக தெரியவருகிறது. மனைவியின் செயலை பார்த்து அதிர்ச்சியடைந்த விஷ்ணு, தனது அறைக்குள் சென்று கதவை சாத்தியுள்ளார். நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கவில்லை. 

இதனையடுத்து, உறவினர்கள் உதவியுடன் கதவை திறந்து உள்ளே சென்று பார்க்கையில், விஷ்ணு தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதற்குள்ளாகவே தனது கணவரின் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்த, சாலினி தானும் கத்தியை எடுத்து கழுத்தறுத்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். 

கழுத்தில் ரத்தம் வழிந்தோடிய நிலையில், அவரை மீட்டு மருத்துவமனைக்கு உறவினர்கள் அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், விஷ்ணுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தற்போது ஷாலினி தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். 

இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம் வயதில் காதல் வயப்பட்டு எந்த புரிதலும் இல்லாமல், நட்பில் தொடங்கி காதலில் விழுந்து திருமண வாழ்க்கையில் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலை முடிவெடுத்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari Couple Suicide due to Love Marriage Life Problem


கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,
Seithipunal