பவ்டா பைனான்ஸின் போக்கிரித்தனம்.. அதிகவட்டி கேட்டு தொந்தரவு..! தூக்கில் தொங்கிய கூலித்தொழிலாளி.! - Seithipunal
Seithipunal


பவ்டா என்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் மிரட்டல் காரணமாக, சமையல் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சோகம் அரங்கேறியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பரவன் காலனி பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் சமையல் தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், நோயால் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் இருந்துள்ளார். 

குடும்ப வறுமையைப் போக்க அவரது மனைவி முத்துலட்சுமி குளச்சல் பகுதியில் பேக்கரிக்கு வேலைக்கு சென்று வந்த நிலையில், தனது மூன்று குழந்தைகளையும் காப்பாற்றி வந்துள்ளார். கண்ணன் வீட்டில் இருந்தபடியே குழந்தைகளை பராமரித்து வந்துள்ளார். 

இந்நிலையில், இவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்ற பவ்டா என்று நிதி நிறுவனத்தின் ஊழியர்கள், குறைந்த வட்டியில் கடன் தருவதாக ஆசை காண்பித்துள்ளனர். ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த முத்துலட்சுமி, குறைந்த வட்டி கடன் என்பதால் நிறுவனத்திற்கு சென்று ரூபாய் முப்பதாயிரம் கடனாகப் பெற்றுக் கொண்டுள்ளார். 

தனக்கு கிடைத்த குறைந்தபட்ச வருமானத்தை வைத்து குடும்பச் செலவை சமாளித்து, கடன் பெற்ற தொகையை சிறிது சிறிதாக செலுத்தி வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக முத்துலட்சுமியின் வருமானம் பாதிக்கப்பட்டு வட்டிகட்ட இயலாமல் தவித்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று கண்ணன் வீட்டில் இருக்கும் போது, அங்கு வந்த 6 பேர் கடன் வாங்கிய நிதி நிறுவனத்தில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளனர். 

இதன்பின்னர், கடனை செலுத்த வக்கில்லாமல் ஏன் கடன் வாங்குகிறீர்கள்? என்று அராஜகமான பேசி, கடுமையான வார்த்தைகளால் அவதூறாக திட்டித்தீர்த்துள்ளனர். இதன்போது 2 பெண்களும் அந்த நிறுவனத்தில் இருந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மனமுடைந்துபோன கண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

இரவு நேரத்தில் பணியை முடித்துவிட்டு வந்த முத்துலட்சுமிக்கு, கணவனின் தற்கொலை சம்பவம் தெரியவந்துள்ளது. கணவனின் உடலை கட்டியணைத்து மனைவி கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், கண்ணனின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், குறைந்த வட்டிக்கு தனியார் நிதி நிறுவனங்கள் கடன் கொடுப்பதாக கூறினால் அதனை பெற வேண்டாம் என்றும் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிறுவனம் இதனைப்போன்று கன்னியாகுமரியில் உள்ள மக்களிடம் ஆசைவார்த்தை கூறி கடன் வழங்கி வாட்டி வதைத்து வருவதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், முதலில் ஒப்புக்கொண்ட வட்டியை விட பின்னாளில் அதிக வட்டி கேட்கப்பதாகவும் கூறப்படுகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari BWDA Finance Ltd Loan Torture Coli Worker Suicide 20 Feb 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal