காஞ்சிபுரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையால் சேதம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த மாதம் முதல் பருவமழை தொடங்கி தீவிரமடைந்துள்ளது. அதனால், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் விளைநிலங்களில் தண்ணீர் குளம் போல் காட்சியளிக்கிறது.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையினால், பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்தூர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட ஐந்து வட்டங்களிலும் மழை பாதிப்பு அதிகம் உள்ளது.

இதையடுத்து, வேளியூர்  ஊராட்சியில், 900 ஏக்கர் நிலங்கள் பயிரிடப்பட்டு உள்ளது. அவை அனைத்திலும் மழை நீர் புகுந்ததினால், அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 600 ஏக்கர்களுக்கு மேல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.

இதேபோல், வேர்கடலை, கரும்பு உள்ளிட்ட பயிர்களும் மழைநீரால் சேதமடைந்து உள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் கவலைக்கு ஆளாகி உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanchipuram heavy rain rice crops demage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->