கள்ளக்குறிச்சியின் கள்ளச்சாராய வேட்டை! தயார் நிலையில் மூலப்பொருட்கள்! தட்டி தூக்கிய போலீசார்!
Kallasaraya vettai in kallakurichi
கள்ளக்குறிச்சி அருகே சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் 1500 கிலோ வெள்ளம் மற்றும் 450 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

குறிப்பாக கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு உண்டான ஊரல் பானைகள் போடப்பட்டு இருப்பதை ப்ரோன்கள் மூலமாக போலீசார் கண்டறிந்துள்ளனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் மாவட்ட போலீசார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் கல்வராயன் மலைப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, வஞ்சிக்குழி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு மூலப் பொருளாக பயன்படுத்தப்படும் 1500 கிலோ வெள்ளம் மற்றும் 450 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டறியப்பட்டது.
இதனை அடுத்தது அதனை அங்கேயே தீயிட்டு அழித்த போலீசார், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Kallasaraya vettai in kallakurichi