கள்ளக்குறிச்சி | அரசு மருத்துவர் இல்லை., கர்ப்பிணி பெண் சிசுவுடன் பலி! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம், சேராப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேற்று மாலை பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக வந்துள்ளார்.

அப்போது ஆரம்ப சுகாதர நிலையத்தில் பிரசவம் பார்க்க மருத்துவர்கள் யாரும் இல்லை. செவிலியர் மட்டும் இருந்துள்ளனர்.

மருத்துவர்கள் இல்லாததால்,  அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு இரவு பிரசவம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், மேல் சிகிச்சைக்கு அவரை செல்ல 108 ஆம்புலன்ஸ் வாகனம் இல்லை என்று அவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், கர்ப்பிணி பெண், அவரது கருவில் இருந்த குழந்தையுடன் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் 150 க்கும் மேற்பட்டவர்கள், இன்று அதிகாலை 5 மணி முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kallakurichi serapattu lady death case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->