அடடே! தாக்குதல், மிரட்டல், சில்மிஷம்...! – நடிகர் தினேஷை சுற்றி கிளம்பிய சர்ச்சை சூறாவளி...!
Attacks threats insults whirlwind controversy surrounding actor Dinesh
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள தண்டையார்குளத்தைச் சேர்ந்த கருணாநிதி, 2022-ஆம் ஆண்டு சென்னையில் சினிமா யூனிட் கேண்டீனில் வேலை பார்த்தபோது, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த சின்னத்திரை நடிகர் தினேஷ் அவர்களுடன் நட்பு ஏற்பட்டது.
இந்த அறிமுகமே பின்னர் பெரிய சர்ச்சையின் கதவுகளைத் திறந்தது.கருணாநிதியின் மனைவிக்கு மின்வாரியத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி, தினேஷ் தண்டையார்குளத்தில் நேரடியாக ரூ.3 லட்சம் பெற்றுவிட்டார். ஆனால் வேலை கிடைக்கவில்லை.

பணத்தை திரும்பக் கேட்டபோது, தினேஷும், அவருடைய தந்தையும் தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கருணாநிதி பணகுடி போலீசில் பரபரப்பு புகார் அளித்தார்.இந்த புகாரின் பேரில் பணகுடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.
இதேசமயம், வள்ளியூர் கோர்ட்டில் நடந்து வரும் ஒரு வேறு வழக்கில் ஆஜராக வந்திருந்த நடிகர் தினேஷை நேற்று போலீசார் அழைத்துச்சென்று கேள்வி பதில் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர், தன்மீது எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்களிடம் தினேஷ் விளக்கம் அளித்ததாவது,"நான் மோசடி செய்தேன் என்பதும், பணம் வாங்கி வேலை வாங்கித்தருவதாக சொன்னது என்பதும் முழுக்க முழுக்க பொய். கடந்த 4 ஆண்டுகளாக ஓரு வழக்கில் நீதிமன்றத்தில் நியாயமாக போராடிவருகிறேன்.
அந்த வழக்கின் எதிர்தரப்பு, என்னை சிக்கவைக்க திட்டமிட்டு இப்படியான புகார் அளிக்க வைத்துள்ளனர். சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில் நான் நேரடியாக வள்ளியூர் கோர்ட்டிலேயே இருந்தேன். நான் நடிகர் என்பதால், மிரட்டினால் பணம் கொடுத்து விடுவேன் என்று நினைத்து சில கும்பல்கள் இப்படிப் போலி புகார் செய்து வருகிறார்கள்” என தினேஷ் தெரிவித்தார்.
English Summary
Attacks threats insults whirlwind controversy surrounding actor Dinesh