வாக்குத் திருட்டு என்னும் தங்கள் நமத்துபோன உருட்டைக் கொண்டு வராதீர்கள் இண்டி கூட்டணியினரே.... தமிழக பாஜக சொன்ன செய்தி!
Bihar Election 2025 DMK NDA BJP Tamilnadu
தமிழக பாஜக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "EVM/SIR என ஸ்க்ரிப்ட்டுகளைத் தயார் செய்யும் இண்டி கூட்டணிக்கு தமிழக பாஜகவின் நினைவூட்டல்!
பிஹார் மக்களின் பேராதரவு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு தலையில் துண்டணிந்து உட்கார்ந்திருக்கும் இண்டி கூட்டணியினரே!
ஒவ்வொரு முறை தேர்தலில் தோற்கும்போதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் போலியாக குறைகூறி வந்த புளித்து போன பொய்யை இன்றைய AI காலத்திலும் கூற முன்வராதீர்கள்!
ஒருவேளை தேர்தல் ஆணையத்தின் வழக்கமான நடைமுறையான SIR-ஐ தோல்விக்குக் கைகாட்டலாம் என்று யோசித்தால், அந்த யோசனையைக் கைவிடுங்கள். ஏனெனில் SIRஆல் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன என்னும் தங்களது பொய்யைத் தவிடுபொடியாக்கும் வகையில், வரலாற்றிலேயே அதிகமாக 66.91% அதாவது 4,98,65,920 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிலும் வரலாற்றிலேயே முதல் முறையாக 71.6% பெண் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். கடந்த 2020 பிஹார் தேர்தலோடு ஒப்பிடும் போது கிட்டத்தட்ட 49,62,013 பெண் வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர்.
இப்படி பெருமான்மையான மக்களின் ஆதரவுடன் ஜனநாயக முறைப்படி தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றுள்ளது எனும் அடிப்படை உண்மையைப் புரிந்து கொண்டபின், மறுபடி வாக்குத் திருட்டு என்னும் தங்கள் நமத்துபோன உருட்டைக் கொண்டு வராதீர்கள்!
இனியாவது, மக்களின் தீர்ப்பை ஏற்று மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்! அல்லது அந்த மனப்பக்குவம் கூட இல்லை என்றால், உருப்படியான திசைதிருப்பும் பொய் தான் வேண்டுமானால், தங்கள் கூட்டணியின் முக்கிய அங்கமான திமுகவிடம் கேளுங்கள்! பொய் வித்தையில் அவர்களை மிஞ்ச ஆள் இல்லை" என்று தெரிவித்துள்ளது.
English Summary
Bihar Election 2025 DMK NDA BJP Tamilnadu