சென்னை அணியில் இருந்து விடுவிக்கும் 06 வீரர்கள்: முழு விவரம் உள்ளே..!
Full details of the 06 players to be released from the Chennai team are inside
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறவுள்ளது. இதையொட்டி ஐ.பி.எல் அணிகள் தங்கள் தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நாளைக்குள் 10 அணிகளும், ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடந்து வருகிறது.
கடந்த சீசனில் (18-வது சீசன்) ஐ.பி.எல். வரலாற்றில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. 18 வருட ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில் சென்னை அணி 06 வீரர்களை விடுவிக்க திட்டமிட்டுள்ளது. அவர்கள் பட்டியல் பின்வருமாறு:
01- டெவோன் கான்வே
02- ரச்சின் ரவீந்திரன்
03- ராகுல் திரிபாதி
04- தீபக் ஹூடா
05- விஜய் சங்கர்
06- ஜேமி ஓவர்டன்
முன்னதாக சிஎஸ்கே நிர்வாகம், சஞ்சு சாம்சனை வாங்க மீண்டும் ராஜஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சஞ்சு சாம்சனுக்கு பதிலாக முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவை கொடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன் வந்துள்ளது.
English Summary
Full details of the 06 players to be released from the Chennai team are inside