பீகார் தேர்தல் இறுதியான முடிவுகள்: அமோக வெற்றியுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி!
bihar election result 2025 final BJP JDU NDA rjd congress cpim
பீகார் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில், தே.ஜ.கூ. கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில்,
பாஜக 89,
ஐக்கிய ஜனதா தளம் 85,
லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) 19,
ஹிந்துஸ்தானி அவ மோட்சா 5,
ராஷ்டிரிய லோக் மோட்சா 4 இடங்களில் வென்றுள்ளன.
ராஷ்ட்ரீய ஜனதா தளம்- காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெறும் 34 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதில்,
ராஷ்ட்ரீய ஜனதா தளம் 25,
காங்கிரஸ் 6,
சிபிஐ(எம்எல்) 2,
சிபிஐ(எம்) 1 இடத்தில வெற்றி பெற்றுள்ளது.
மேலும் தனித்து போட்டியிட்ட அசாதுதீன் ஒவைசி கட்சியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் மற்றும் இந்தியன் இன்குலுசிவ் பார்ட்டி தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. பெரும்பாலான இடங்களில் அக்கட்சி டெபாசிட் இழந்து இருந்தாலும், பல தொகுதிகளில் காங்கிரஸ்-RJD தோல்விக்கு வழிவகுக்கும் வகையில் வாக்கு பிரிப்பில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
வாக்குப்பதிவு விவரங்கள்:
நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில் வரலாறு காணாத அளவில் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஆளும் கூட்டணியில் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகளில் போட்டியிட்டன.
எதிரணியில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 143 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும் போட்டியிட்டன.
English Summary
bihar election result 2025 final BJP JDU NDA rjd congress cpim