எமோஷனல் ட்ரிப்! -அம்மாவின் பழைய குறையை துடைத்த மாளவிகா...! - Seithipunal
Seithipunal


நடிகை மாளவிகா மோகனன், தன் தாயுடன் இணைந்து சமீபத்தில் ‘கனவுகளின் நகரம்’ என அழைக்கப்படும் பாரிஸுக்கு சிறப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
மலையாளத்தில் ‘பட்டம் போலே’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான மாளவிகா, தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் திரைப்பட வாய்ப்புகளை குவித்துக் கொண்டிருப்பவர்.

அண்மையில் வெளியான ‘ஹிருதயபூர்வம்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், தற்போது தமிழில் ‘சர்தார் 2’ மற்றும் தெலுங்கில் ‘தி ராஜா சாப்’ படங்களின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.பட வேலை இல்லாத நேரங்களில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை ரசிக்கும் மாளவிகா, இந்த முறை தன் தாயை சிறப்பாக மகிழ்விக்க பாரிஸுக்கு அழைத்துச் சென்றார்.

பயணத்தின் அழகிய நிமிடங்களை புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் பகிர்ந்ததுமே ரசிகர்கள் லைக், கமெண்ட் மழையில் வரவேற்றனர்.இந்தப் பயணத்தின் பின்னணி குறித்து மாளவிகா கூறும்போது,“பத்து வருடங்களுக்கு முன்பு நானும் அம்மாவும் பாரிஸுக்கு வந்திருக்கிறோம்.

ஆனால் தொடர்ந்து பெய்த மழையால் இரண்டு நாட்களும் ஹோட்டல் அறையிலேயே சிக்கிக் கொண்டு எங்கேயும் வெளியே செல்ல முடியவில்லை. ‘பாரிஸை சுற்றிப் பார்க்க முடியவில்லை’ என்ற குறை என் அம்மாவிடம் ஆண்டுகளாக இருந்தது. அதனால் தான் இந்த முறை அவரை மீண்டும் அழைத்துவந்து, அவர் ஆசைப்படும் எல்லா இடங்களையும் காட்டி மகிழ்ச்சியடைய வைத்தேன். பெற்றோர்களுடன் பயணம் செய்வதை நான் ஒருபோதும் தவிர்ப்பதில்லை” என்று கூறி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Emotional Trip Malavika erases her mothers old grievance


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->