ஹிந்து என்றால் திருடன் என்றாரே கருணாநிதி... வாய் பொத்தி இருந்தீர்களே, அது தான் தவறு - திமுக அமைச்சருக்கு பாஜக நாராயணன் பதிலடி!
DMK KN Nehru BJP
பாரதிய ஜனதா கட்சி தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தான் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு 44 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தது தவறா என்று கேட்டிருக்கிறார் தமிழக அமைச்சர் கே.என். நேரு அவர்கள்.
தவறேயில்லை, ஆனால் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது ஹிந்து கோவில் என்று சொன்னபோது வாய்மூடி மெளனமாக இருந்தீர்களே கே.என். நேரு அவர்களே, அது தவறு!
ஹிந்து என்றால் திருடன் என்றாரே கருணாநிதி, அப்போது அதை கேட்டு வாய் பொத்தி இருந்தீர்களே, அது தவறு!
அந்த திருப்பதி கோவில் பணத்தை பாதுகாக்க ஏன் காவல் என்று கனிமொழி நையாண்டி செய்ததை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தீர்களே, அது தவறு!
வைணவ குறியீட்டையும், சைவ குறியீட்டையும் தரக்குறைவாக உங்கள் சக அமைச்சர் பொன்முடி பேசிய போது காதுகளையும், வாயையும் பொத்திக் கொண்டு இருந்தீர்களே, அது தவறு!
கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் காலிகள் கந்த சஷ்டி கவசத்தை கேவலப்படுத்திய போது அமைதி காத்தீர்களே, அது தவறு.
எல்லாவற்றிருக்கும் மேலாக, அறநிலையத்துறையினால் கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரங்களாக மாறிக் கொண்டிருப்பதை மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே, அது தவறு! என்று தெரிவித்துள்ளார்.