பாடல்களின் புராணம்… படத்தின் புரளி...? ‘காந்தா’ மீது வந்த வழக்குக்கு ராணா டகுபதியின் ரொம்ப ஸ்ட்ரெய்ட் ஆன பதில்...! - Seithipunal
Seithipunal


துல்கர் சல்மான் நடிப்பில் செல்வமணி செல்வராஜ் இயக்கிய ‘காந்தா’ திரைப்படம் இன்று தியேட்டர்களில் பிரமாண்டமாக வெளியானது. துல்கருக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ நடித்துள்ள இந்தப்படத்தை வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா இணைந்து தயாரித்துள்ளன.

மேலும், ராணா டகுபதி படத்தில் முக்கியமான, திரைக்கதை முன்னேறும் ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.இந்நிலையில், ‘காந்தா’ பட திரையரங்க வெளியீட்டை தற்காலிகமாக தடுக்க தமிழக உயர்நீதிமன்றத்தின் உரிமையியல் நிதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

புகார் மனுவை பாகவதரின் மகள் வழி பேரன் தாக்கல் செய்த நிலையில், தயாரிப்பு நிறுவனங்களுக்கு வரும் 18–ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதற்கிடையில், நடிகரும் தயாரிப்பாளருமான ராணா டகுபதி, தனது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடும் போது,"காந்தா படத்துக்கு எதிராக வழக்கு வந்திருக்கிறது… அதைப் பற்றிச் சொல்லவேண்டும்?” என ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு ராணா திடீர் பதில் கொடுத்ததாவது,"அந்த வழக்கு அடிப்படை ஆதாரமே இல்லாத ஒன்று. படத்தில் எதுவும் ‘உண்மை சம்பவம்’ ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. நவம்பர் 14–ம் தேதி திரையரங்கில் பார்த்தால் உண்மை புரியும்,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.இதன் மூலம், இப்படம் தியாகராஜ பாகவதர் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்பது தெளிவாகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

legend of songs films hoax Rana Daggubatis very straight answer case against Kaantha


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->