கள்ளச் சாராயத்தை ஒழிக்க கிராம அளவில் கண்காணிப்பு குழு.. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் 18ம் தேதி கள்ளச் சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் பலர் கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து அங்கு கள்ளச் சாராயம் விற்பனையில் தொடர்புள்ளதாக இதுவரை 21 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம். எஸ். பிரசாந்த் , கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தை முற்றிலும் அழிக்கும் நோக்கத்தில் கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் கிராம உதவியாளர், ஊராட்சி மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர், அங்கன்வாடி பணியாளர், கிராம ரோந்து காவலர் மற்றும் பெண் சுகாதார தன்னார்வலர் ஆகியோரை உறுப்பினர்களாக நியமனம் செய்து மாவட்டத்தில் கள்ளச் சாராய தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி இந்த குழு தங்கள் வரம்புக்குட்பட்ட ஒவ்வொரு கிராமங்களிலும் கள்ளச் சாராயம் காய்ச்சுதல், பதுக்கி வைத்தல், விற்பனை செய்தல் மற்றும் கடத்துதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்த தகவல்களைக் கண்டறிந்து உடனடியாக தெரிவிக்க வேண்டும். 

அந்த தகவல்களின் அடிப்படையில் காவல்துறை குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் என்றும், மேலும் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட அனைத்து போதை பொருட்களை விற்பனை செய்வோரையும் கண்டறிந்து அவர்கள் மீதும் காவல்துறை குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்வதோடு, அந்த கடைகளின் உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும்  என்று உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kallakurichi District Collector Ordered to Form Village Level Vigilance Committee to Eradicate Spurious Liquor


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->