சசிகலா குறித்தும்.. திமுக குறித்தும் அமைச்சர் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, முதலமைச்சர் பதவி கொடுத்த சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துள்ளதாக மு க ஸ்டாலின் கூறிவருகிறார். நாங்கள் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. முக ஸ்டாலின் தான் தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளார். மத்திய அரசில் அங்கம் வகித்த போது தமிழர்களின் உரிமைகளை காவு கொடுத்தவர்கள் திமுகவினர். 

நீட்தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வந்தது. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு கையெழுத்திட்டது, நெய்வேலி நிலக்கரி பங்கு தனியாருக்கு விற்பனை, காவிரி நீர் பிரச்சினை, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு பிரச்சினை போன்ற தங்களது சுயநலத்திற்காக தமிழர்களின் உரிமைகளையும் காவு கொடுத்தவர்கள் திமுகவினர். குடும்பத்தினருக்கு பதிவுகளை பெறுவதற்கு திமுகவின் டெல்லி சென்றனர்.

மத்தியில் குடும்பத்தினருக்கு பதவியைப் பெறுவதற்கு தான் தமிழர்களின் வாக்குகளைப் பெற்று டெல்லிக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது திமுக. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தங்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பதவி கேட்டு டெல்லிக்கு செல்லவில்லை. தொடர் மழை பாதிப்பு, புயல் பாதிப்பு நிவாரண கேட்க தான் முதலமைச்சர் பிரதமரை சந்திக்க டெல்லி சென்றார். இந்த சந்திப்பின்போது அரசியல் பேசப்படவில்லை. 

தமிழர்களின் உரிமைகளை கேட்க வந்ததாக முதலமைச்சர் தெளிவாக கூறினார். மு க ஸ்டாலின் வாயை மூடிக்கொண்டு இருந்தால் நல்லது. திமுக எந்த வகையில் தமிழர்களுக்கு நியாயத்தினை பெற்று தந்துள்ளனர். எனவே முதலமைச்சர் பற்றி பேச முக ஸ்டாலினுக்கு தார்மீக உரிமை கிடையாது என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kadambur raju press meet on jan 21


கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,Advertisement

கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,
Seithipunal