அதிமுகவில் ஒன்றிணைந்தே செயல்படுகிறோம் - தோல்வி குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் பணம் பாதாளம் வரை பாய்ந்தது பாய்ந்ததாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், பணத்தை நம்பாமல் எங்களது சாதனைகளை கூறி நாங்கள் வாக்கு சேகரித்தோம் என்றும், இந்த இடைத்தேர்தலில் திமுக 350 கோடி ரூபாய் செலவு செய்து அதிகார துஷ் பிரயோகம் செய்துள்ளது என்றும் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் தெரிவித்தாவது, "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவை கண்டு பிற கட்சிகள் பயந்தன. 

குறிப்பாக திமுக எந்த தேர்தலிலும் இதுபோல் பயந்ததது இல்லை. பணத்தை வாரி இறைத்து போலியான வெற்றியை திமுக பெற்றுள்ளது. வாக்கு நடைபெறும் மையத்தில் எவ்வித சோதனையும் நடைபெறவில்லை.

ஈரோடு கிழக்கு வெற்றி திமுகவுக்கு தற்காலிகமான வெற்றி தான். இதே போன்ற ஒரு வெற்றி மக்களவைத் தேர்தலில் திமுக பெறுவதற்கு வாய்ப்பே இல்லை.

அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறோம். வரும் காலங்களில் அதிமுக மகத்தான வெற்றியை பெறும். அதிமுகவை பொறுத்தவரை எழுச்சியாகவே செயல்பட்டு கொண்டு இருக்கிறது" என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jeyakumar Say About erode loss


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->