புதுக்கோட்டை : கல்குவாரியில் மண் சரிந்து பொக்லைன் ஓட்டுநர் உயிரிழப்பு.!!
jcb driver died in landslide at Kalquarie in putukottai
புதுக்கோட்டை : கல்குவாரியில் மண் சரிந்து பொக்லைன் ஓட்டுநர் உயிரிழப்பு.!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிள்ளுக்குளுவாய்பட்டியில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் இருந்து ஜல்லி, கிரஷர் மண் உள்ளிட்டவை பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த கல் குவாரியில் அதே பகுதியை சேர்ந்த ஹிட்டாச்சி பொக்லைன் ஓட்டுனர் லட்சுமணன் என்பவர் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது பாறையின் அதிர்வு தாங்காமல் கல் குவாரியின் ஒரு பகுதி மளமளவென சரிந்து விழுந்துள்ளது.
இதைப்பார்த்த அங்கிருந்த கூலி தொழிலாளிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடி உள்ளனர். ஆனால் ஹிட்டாச்சி வாகனத்திற்குள் அமர்ந்திருந்த ஓட்டுநர் லட்சுமணன் மண் சரிவதை பார்த்து எந்திரத்திலிருந்து வெளியேறுவதற்குள் பெரிய அளவில் மண் சரிந்து எந்திரத்தையே மூடியது.
இதனால் மணிகண்டன் வெளியேற முடியாமல் மண்ணில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து அங்கிருந்த தொழிலாளிகள் மண் மற்றும் பாறைகளை அகற்றி லட்சுமணனைக் காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

இதைத்தொடர்ந்து அவர்கள் சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி அவர்கள் விரைந்து வந்து தொழிலாளர்களின் உதவியுடன் பாறை குவியல் மற்றும் மண்ணை அகற்றி உள்ளே சிக்கி உள்ள லட்சுமணனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் அவர்களால் லட்சுமணனை உயிருடன் மீட்கமுடியவில்லை. இதையடுத்து போலீசார் லட்சுமணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
jcb driver died in landslide at Kalquarie in putukottai