இளம்பெண்ணின் பேச்சை கேட்டு மயங்கிய சென்ற ஐ.டி.ஊழியர்..கடைசியில் நடந்த அதிர்ச்சி  சம்பவம்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் இளம்பெண்ணின் கிளுகிளுப்பான பேச்சை நம்பி சென்ற ஐ.டி.ஊழியருக்கு கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தை தற்போது பார்க்கலாம்.

புதுவை மாநிலம் திருக்கனூர் அடுத்த கூனிச்சம்பட்டு பகுதியை சேர்ந்த 21 வயது  ஐ.டி. ஊழியரை செல்போனில்  அழைத்த  இளம்பெண், ஒருவர் அவரிடம் ஆபாசமாக கிளுகிளுப்பாக பேசியுள்ளார் .
இதையடுத்து இந்த பேச்சில் மயங்கிய ஐ.டி. ஊழியர், அந்த பெண்ணை புதுவை இந்திராகாந்தி சதுக்கம் அருகே நேற்று முன்தினம் நேரில் சந்தித்து பேசியுள்ளார் . அப்போது  அந்தப் பெண், இருவரும் ஜாலியாக இருக்கலாம் என்று கூறி, கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடி பீச் அருகே  உள்ள தங்கும் விடுதிக்கு அவரை அழைத்துச்சென்றார்.

அப்போது அறைக்குள் சென்று கதவை மூடிய நிலையில் வாலிபரை  நிர்வாணமாக நிற்கும்படி இளம்பெண் கூறியுள்ளார். அவரும் நிர்வாணமாக நின்ற நிலையில், ஒரு கும்பல் திடீரென்று அந்த அறைக்குள் புகுந்தது ஆட்டத்தை கலைத்தது . அப்போது அந்த கும்பல்  ஐ.டி. ஊழியரை நிா்வாண நிலையில் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர்.பின்னர்  கத்தியால் உடலில் கிழித்து, கொடுமை செய்து ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினர். 

இதையடுத்து அவர் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துக்கொண்ட கும்பல்  மற்றொரு மோட்டார் சைக்கிளில் அவரை வீட்டுக்கு கூனிச்சம்பட்டுக்கு அழைத்துச்சென்றனர்.பணம் எடுத்து வர வீட்டுக்கு சென்ற வாலிபர் ஓடிவிட்டார்.பின்னர் சந்தேகம் அடைந்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இது தொடர்பாக ஐ.டி. ஊழியர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து  போலீசார் சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த விடுதியை குத்தகைக்கு எடுத்து நடத்தும் மூலக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெர்மின் ஆல்வின் பிரபல ரவுடி பெரிய காலாப்பட்டு சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பிரதீப் என்கிற சுகன், மரக்காணம் கூனிமேடு திருநாவுக்கரசு , வில்லியனூர் மணவெளி மோகன பிரசாத் , இடையஞ்சாவடி சுனில்  ஆகிய 4 பேரும் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மூலம் ஐ.டி.ஊழியரிடம் பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது.

 இதையடுத்து ஜெர்மின் ஆல்வின், திருநாவுக்கரசு, மோகனபிரசாத், சுனில் ஆகிய 4 பேரை கைது செய்தனர். பிரபல ரவுடி பிரதீப் என்கிற சுகன் மற்றும் இளம்பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IT employee stunned by young girls speech The shocking incident at last


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->