சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
IPL chepauk stadium bomb threat
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பாதுகாப்பு பதற்றத்தின் காரணமாக, நடப்பு ஐ.பி.எல். சீசனில் எஞ்சிய போட்டிகள் ஒரு வாரம் ஒத்திவைக்கப்படும் என பிசிசிஐ அறிவித்தது.
இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானம் குறித்த வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி கிரிக்கெட் வாரியத்துக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், "சேப்பாக்கத்தில் போட்டி நடைபெற்றால் குண்டு வெடிக்கும்" என எச்சரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத இயக்கம் தொடர்புடையதாக தோன்றும் மின்னஞ்சல் மூலமாகவே இந்த மிரட்டல் வந்துள்ளதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
தற்போது மைதானத்தில் பாதுகாப்பு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை மற்றும் தேசிய விசாரணை அமைப்புகள் இச்சம்பவம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளன.
இந்த சூழலில், எதிர்வரும் போட்டிகள் எங்கு மற்றும் எப்போது நடைபெறும் என்பது குறித்து பிசிசிஐ விரைவில் முடிவெடுக்க இருக்கிறது. .
English Summary
IPL chepauk stadium bomb threat