சர்வதேச தகவல் அறியும் தினம்!.
International Day for Universal Access to Information
சர்வதேச தகவல் அறியும் தினம்!.
பல்கேரியாவில் உள்ள சோபியாவில் 2012 இல்.நடந்த கூட்டத்தில், உலகெங்கிலும் உள்ள தகவல் சுதந்திர அமைப்புகள் செப்டம்பர் 28 ஆம் தேதியை "அறியும் உரிமை" நாளாக முன்மொழிந்தன. அப்போதிருந்து, ஒவ்வொரு தனிநபருக்கும் அரசாங்கத்தின் தகவல்களைப் பெறுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான அடிப்படை நோக்கத்துடன் நிறுவனங்கள் இந்த தினத்தை கொண்டாடுகின்றன.
நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதற்காக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பெயர் என்னவாக இருந்தாலும் அதைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்காக உலகெங்கிலும் உள்ள தகவல் சுதந்திர அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் கூட்டங்களை நடத்தியுள்ளனர். சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் பிரிவு 19 இன் படி, மற்ற மனித உரிமைகளை அனுபவிப்பதற்கு அவசியமான அடிப்படை உரிமைகளில் தகவல் பெறும் உரிமையும் ஒன்றாகும்.

'பசுமைப் புரட்சியின் தந்தை'திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் நினைவு தினம்!.
பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் 1925ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி கும்பகோணத்தில் பிறந்தார். இவரின் முழுப்பெயர் மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன்.
இவருடைய பெற்றோருக்கு இவர் மருத்துவராக வேண்டும் என்ற ஆசை. ஆனால், வங்கத்தில் 1942-ல் ஏற்பட்ட பஞ்சத்தால் இவர் வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்தார்.
இவர் ஐபிஎஸ் அதிகாரியாக 1948-ல் தேர்வானார். ஆனால், பணியில் சேரவில்லை. சிறந்த ஆராய்ச்சியாளரான இவர், நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்களை எழுதியுள்ளார்.
1960களில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது 'இந்தியர்களால் உணவு உற்பத்தி செய்ய முடியாது. பசியால் கொத்துக் கொத்தாக உயிரிழப்பார்கள்' என்று பல நாடுகள் கூறினர்.
இதை பொறுத்துக்கொள்ள முடியாத இவர், ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து, 200 சதவீத லாபத்தை சாதித்துக் காட்டினார். இதை 'கோதுமைப் புரட்சி' என்று பாராட்டினார் பிரதமர் இந்திரா காந்தி.
ராமன் மகசேசே விருது(1971), உலக உணவு பரிசு(1987), யுனெஸ்கோ மகாத்மா காந்தி விருது (2000), இந்திரா காந்தி தேசிய ஒருமைபாட்டுக்கான விருது(2013), பத்மஸ்ரீ(1967), பத்ம பூஷண்(1972), பத்ம விபூஷண்(1989) உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
வேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய எம்.எஸ்.சுவாமிநாதன் தனது 98வது வயதில் 2023 செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று மறைந்ததார்.
English Summary
International Day for Universal Access to Information