இன்ஸ்டா காதலால் பறிபோன 12 சவரன் நகை! மகளின் செல்போனை பார்த்த பெற்றோர் பேரதிர்ச்சி!
Instagram love student stole jewelry
மறைமலை நகர் பகுதியை சேர்ந்த சிறுமி (வயது 16) அதே பகுதியில் உள்ள பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு இன்ஸ்டாகிராம் செயலி மூலம் திருநெல்வேலி திசைன்விளை பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் என்ஜினியர் ஆவார்.
இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறி, செல்போன் மூலம் பேசி காதலை வளர்த்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் செல்போனில் பிரிபையர் கேம் விளையாடுவது வழக்கம்.

இதனால் வேல்முருகன் மாணவியிடம் விளையாட்டுக்காக பணம் தேவைப்படுகிறது என அடிக்கடி பணம் வாங்கி வந்ததாக தெரிகிறது.
மாணவி அவரது பெற்றோருக்கு தெரியாமல் வேல்முருகனுடன் பழகி வந்த நிலையில் வீட்டிலிருந்த 12 சவரன் நகை மாயமாகி இருப்பதை பார்த்த பெற்றோர் சந்தேகம் அடைந்து மகளிடம் இது குறித்து கேட்டுள்ளனர்.
அதற்கு மாணவி, காதலன் வேல்முருகனுக்கு பணம் தேவைப்படும் போது நகையை கூரியர் மூலம் அனுப்பி வைத்ததாக தெரிவித்தார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளின் செல்போனை வாங்கி பார்த்த செய்தபோது அதில் மகளின் ஆபாசமான புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவை வேல்முருகனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்ததை பார்த்தனர்.
பின்னர் மாணவியின் பெற்றோர் இது குறித்து கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பெயரில் போலீசார் தனிப்படை அமைத்து திசையன்விளை சென்று மாணவியை ஏமாற்றி பணம், நகை பறிமுதல் செய்த வேல்முருகனை கைது செய்தனர்.
மேலும் இவர் இது போன்று வேறு பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு உள்ளாரா என அவரது செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Instagram love student stole jewelry