சயனைடு பாலை கலந்து குடும்பத்தோடு தற்கொலை.. இறுதி பகீர் வாக்குமூல வீடியோ பதிவு..! விழுப்புரத்தில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தரிக்கரை சலாமத் நகர் பகுதியை சார்ந்தவர் அருண்குமார் (வயது 34). இவர் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னதாக சிவகாமி சுந்தரி (வயது 28) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். 

இவர்கள் இருவருக்கும் பிரியதர்சினி (வயது 4)., யுவஸ்ரீ (வயது 3) மற்றும் பாரதி (வயது 1) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில்., அருண்குமார் அப்பகுதியில் இருக்கும் நகை பட்டறை வைத்து தொழில் செய்து வந்துள்ளார். 

இவரது நகை பட்டறையில் 5 பேர் பணியாற்றி வந்த நிலையில்., தொழிலுக்காக பல இடங்களில் கடன் வாங்கி தொழில் செய்து வந்துள்ளார். இதில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. 

lottery, online lottery, 3 number lottery,

இந்த நேரத்தில் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்ட நிலையில்., அருண்குமார் பணம் கொடுக்க இயலாது தவித்து வந்துள்ளார். இதனையடுத்து 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை கட்டுக்கட்டாக வாங்கிக்கொண்டு பரிசுகளுக்காக காத்திருந்துள்ளார். 

இவருக்கு பரிசுகள் ஏதும் விழாமல் இருந்த நிலையில்., கடன் தொல்லையும் மேலும் அதிகரித்தால் குடும்பம் நடத்த இயலாமல் தவித்து., தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இவரின் திட்டப்படி தனது மனையிடமும் இது குறித்து கூறியுள்ளார். 

இதனையடுத்து குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில்., நேற்று மாலை நேரத்தில் அருண்குமார் வீட்டிற்கு சையனைடு வாங்கி வந்து., இரவு 10 மணியளவில் பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர். பின்னர் இருவரும் சயனைடை பாலில் கலந்து குடித்து மயங்கியுள்ளனர். 

மேலும்., இவர்கள் தற்கொலை செய்வதற்கு முன்னதாக விடியோவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சிகளை நண்பர்களுக்கு பகிர்ந்த நிலையில்., இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் வீட்டிற்கு சென்ற நேரத்தில் இவர்கள் மயக்கத்தில் இருந்துள்ளனர். 

இதனையயடுத்து இது குறித்து காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அனைவரையும் மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அனைவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இவர்களின் இறப்பு செய்தியை அறிந்த உறவினர்கள் மருத்துவமனை மற்றும் வீட்டிற்கு முன்னர் திரண்டதால் பெரும் பரபரப்பானது ஏற்பட்டது. மேலும்., லாட்டரி சீட்டு நம்பிக்கை மற்றும் கடன் தொல்லையால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த 10 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in villupuram family members suicide and died loan problem


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal