காட்டின் ஆழத்தில் படமாக்கப்பட்ட ‘கும்கி 2’…! பர்ஸ்ட் லுக்கில் பதுங்கிய சுவாரஸ்யம் என்ன?
Kumki 2 shot deep forest Whats interesting thing hidden first look
தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா தடம் பதித்த திரைப்படம் ‘கும்கி’. பிரபு சாலமன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - லட்சுமி மேனன் ஜோடியாக, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்த இந்த படம், கடந்த 2012ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்ததோடு, கண்ணைக் கவரும் ஒளிப்பதிவின் காரணமாக ஒளிப்பதிவாளர் சுகுமார்க்கு திரையுலகில் தனி அடையாளம் உருவானது.அந்த வெற்றிக்குப் பிறகு பல்வேறு பிரபல படங்களில் தனது கேமரா கலை மூலம் மாயம் செய்த சுகுமார், தற்போது மீண்டும் இயக்குநர் பிரபு சாலமனுடன் கைகோர்த்து ‘கும்கி 2’ மூலம் ரசிகர்களை கவரத் தயாராகியுள்ளார்.

மேலும், முழுக்க முழுக்க காடு சூழலில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா இசை தயாரித்துள்ளார்.இதில் கதாநாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார் என்பதும், வில்லனாக ஹரிஷ் பெராடி நடிக்கிறார் என்பதும் படத்தின் சிறப்பம்சமாகும்.
மேலும், கதாநாயகி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.இந்நிலையில், நேற்று ‘கும்கி 2’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து இன்று வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான ஆவலை இன்னும் அதிகரித்துள்ளது. அதில், படம் மிக விரைவில் ரசிகர்களை சந்திக்க வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Kumki 2 shot deep forest Whats interesting thing hidden first look