தமிழ்நாடு பஸ் கடத்தல் கதை: சென்னை முதல் நெல்லூர் வரை பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருப்பதிக்குச் செல்ல தயாராக இருந்த அரசு பேருந்தை, அடையாளம் தெரியாத மர்ம நபர் திடீரென அபகரித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த கடத்தப்பட்ட பேருந்து, பின்னர் ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் அருகே பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்த பேருந்து நிலைய மேலாளர் ராம்சிங் அளித்த புகாரின் பேரில், காவலர்கள் விரைவாக விசாரணை ஆரம்பித்து, ஒடிசாவைச் சேர்ந்த 24 ஞானராஜன் சாகு என்பவரை கைதுசெய்தனர்.

முதலில், கோயம்பேடு காவலர்கள் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வந்த நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பேருந்து நெல்லூரில் இருப்பதாக ஆந்திர காவலர்கள் தகவல் அளித்தனர்.

உடனே அங்கு விரைந்த காவலர்கள் பேருந்தையும் மீட்டதுடன், அதை இயக்கி சென்ற சந்தேக நபரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu bus hijacking story Excitement from Chennai Nellore


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->