அச்சச்சோ!!! பிரபல இயக்குனரின் குடும்பம் மீது மருமகள் வரதட்சணை புகார்...!-உண்மை என்ன?
Daughter in law files dowry complaint against famous directors family Whats truth
கன்னட சினிமாவின் முன்னணி இயக்குநராக திகழ்ந்து வரும் எஸ். நாராயண், மனைவி பாக்யவதி உடன், பெங்களூரு ஞானபாரதி பகுதியில் வசித்து வருகிறார். இவரது 2 -வது மகன் பவன், கடந்த 2021-ம் ஆண்டு 'பவித்ரா' என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் திருமணத்திற்குப் பிறகு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினைகள் காரணமாக, தற்போது பவன் மற்றும் பவித்ரா பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில், பவித்ரா, தனது கணவர் பவன், மாமனார் நாராயண் மற்றும் மாமியார் பாக்யவதி மீது வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டில் ஞானபாரதி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அந்த புகாரில், “எனக்கும் பவனுக்கும் 2021-ம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான 3 மாதங்களிலேயே மாமனார், மாமியார் என்னை அடிக்கடி கொடுமைப்படுத்தத் தொடங்கினர். இதனால் 2022 முதல் நானும், கணவரும் தனியாக குடியிருந்து வந்தோம். திருமணத்திற்காக என் பெற்றோர் ரூ.1 லட்சம் பணமும், திருமண செலவுகளையும் ஏற்றுக்கொண்டனர்.
எனது கணவர் வேலைக்கு செல்லாமல் இருந்ததால், நான் வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தினேன். கார் வாங்குவதற்காக என் பெற்றோர் மேலும் ரூ.1 லட்சம் கொடுத்தனர். பின்னர், என் தாயிடம் இருந்து என் கணவர் தனியாக ரூ.75 ஆயிரம் வாங்கினார்.இதனால் மட்டும் திருப்தியடையாமல், தற்போது வரதட்சணை கேட்டு அடிக்கடி என்னை துன்புறுத்தி வருகின்றனர்.
மேலும், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்துக்காக என் பெற்றோர் கொடுத்த ரூ.10 லட்சத்தையும் திருப்பித் தரவில்லை. இதைப்பற்றி கேள்வி கேட்டபோது, என் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் என்னை தாக்கி, வீட்டிலிருந்து விரட்டியடித்தனர். ஆகையால், அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, காவலர்கள் எஸ். நாராயண், பாக்யவதி, பவன் ஆகிய மூவருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், மூவரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர்.
English Summary
Daughter in law files dowry complaint against famous directors family Whats truth