வங்கதேச வீரர் தேர்வால் கொதிக்கும் அரசியல் களம்…ஷாருக்கான் அணிக்கு எதிராக கடும் விமர்சனம்! - ஐ.பி.எல். மீது எழுந்த கேள்விகள்
political arena turmoil over selection Bangladeshi player Severe criticism against Shah Rukh Khans team Questions raised about IPL
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமான் சேர்க்கப்பட்டிருப்பது, அரசியல் மற்றும் மத வட்டாரங்களில் கடுமையான சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இந்த முடிவுக்கு எதிராக உத்தவ் சிவசேனா கட்சி மற்றும் இந்து சாமியார்கள் திறந்தவெளி கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.இந்தி நடிகர் ஷாருக்கான் உடமையிலுள்ள கொல்கத்தா அணியால், ஏலத்தின் மூலம் முஸ்தபிசுர் ரகுமான் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வரும் சூழலில், அந்த நாட்டைச் சேர்ந்த வீரரை அணியில் சேர்த்தது தேசிய உணர்வுகளை புண்படுத்தும் செயல் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து, மராட்டிய முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் துபே தெரிவிக்கையில்,"வங்கதேச வீரரை ஐ.பி.எல். போட்டியில் சேர்ப்பது வெறும் விளையாட்டு முடிவு அல்ல; இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான விஷயம். பாகிஸ்தான் மற்றும் வங்கதேச வீரர்களை ஐ.பி.எல். தொடரில் இருந்து முழுமையாக புறக்கணிக்க வேண்டும்.
ஷாருக்கான் வங்கதேச வீரரை விளையாட வைத்தால், அவருக்கு கிடைக்கும் வருமானம் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படலாம். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. துரோகிகளுக்கு இந்தியாவில் இடமில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் தலையீட்டை கோருவோம்” என்று கடும் சொற்களில் எச்சரித்தார்.
இதனிடையே, இந்து சாமியார் ஜகத்குரு ராம்பத்ராச்சார்யாவும் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது,"கொல்கத்தா அணியில் வங்கதேச வீரர் சேர்க்கப்பட்டது மிகவும் துரதிருஷ்டவசமான முடிவு. நடிகர் ஷாருக்கானின் மனநிலை எப்போதும் தேச விரோத சிந்தனையை பிரதிபலிப்பதாகவே உள்ளது.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடைபெறும் தாக்குதல்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்திய அரசு இதனை மௌனமாக அனுமதிக்காது; கடுமையான முடிவு எடுக்கப்படும்.
இந்துக்கள் அளித்த ஆதரவால் தான் வங்கதேசம் உருவானது என்பதை அந்த நாட்டு அரசு தன் மக்களுக்கு விளக்க வேண்டும்” என்றார்.இந்த விவகாரம் தற்போது விளையாட்டு எல்லையை மீறி அரசியல் – மத சர்ச்சையாக மாறி, தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
political arena turmoil over selection Bangladeshi player Severe criticism against Shah Rukh Khans team Questions raised about IPL