மீன்பிடிக்க சென்ற கடலில் மீண்டும் சோகம்…! மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படை நடவடிக்கையால் கைது...!
Tragedy strikes again sea where they went fishing Nine fishermen from Mayiladuthurai arrested by Sri Lankan Navy
தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், அவர்களது விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்படுவதும் வழக்கமான நிகழ்வாக மாறி வருகிறது.
இந்த நடவடிக்கைகள் காரணமாக, கடலை மட்டுமே நம்பி வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இந்த சூழலில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் வழக்கம்போல் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை கப்பல் திடீரென அணுகி, அவர்களது விசைப்படகுகளை சுற்றிவளைத்து பிடித்தது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி, படகில் இருந்த 9 மீனவர்களை கைது செய்ததுடன், 2 நாட்டுப்படகுகளையும் பறிமுதல் செய்து, காரைநகர் இலங்கை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.
இதனிடையே, முதற்கட்ட விசாரணை முடிந்த பிறகு, கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இலங்கை கடற்படை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திடீர் கைது நடவடிக்கை, மீனவர்களின் குடும்பத்தினரிடையே கவலையும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளதுடன், மீனவ சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கை கடற்படை அத்துமீறி நடந்து கொண்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள மீனவ அமைப்புகள், கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளன.
English Summary
Tragedy strikes again sea where they went fishing Nine fishermen from Mayiladuthurai arrested by Sri Lankan Navy