பிறந்தநாளை கொண்டாடிய சுதீப்…! அதே நாளில் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு…!-ஏன்?
Sudeep celebrated his birthday His wife made shocking decision same day Why
அண்மையில், கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் 'சுதீப்' தனது 52-வது பிறந்தநாளை ரசிகர்களுடன் கேக் வெட்டி, ஆனந்தமாக கொண்டாடினார்.
இந்த இனிய நாளில், அவருடைய மனைவி பிரியா, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக ஒரு சிறப்பு முடிவை எடுத்துள்ளார்.இதில் சுதீப்பின் கேர் பவுண்டேஷன் மூலமாக, பிரியா தனது உடல் உறுப்புகளை தானம் செய்யும் விருப்பக் கடிதத்தை பதிவு செய்துள்ளார்.
இதனைக் குறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சுதீப் மனைவி பிரியா:
அந்த வீடியோவில் பிரியா தெரிவித்ததாவது,"ஒவ்வொரு ஆண்டும் சுதீப்பின் பிறந்தநாளில், அவரது ரசிகர்கள் ரத்த தானம், அன்ன தானம் போன்ற நற்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இந்த ஆண்டு நான் ஒரு தனித்துவமான முடிவை எடுத்துள்ளேன். எனது உடல் உறுப்புகளை தானமாக வழங்க பதிவு செய்துள்ளேன்.
உண்மையில் உறுப்பு தானம் செய்யும் செயல்முறை மிகவும் எளிதானது. நம்முடைய சிறிய முடிவு ஒருவரின் உயிரை காப்பாற்றும் என்றால், அதைவிட பெரிய மனித நேயச் செயல் எதுவும் இல்லை. அதே போல சுதீப்பின் ரசிகர்களும் இத்தகைய உயர்ந்த முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
உறுப்பு தானம் செய்வதற்கு முன்னால் நமது உடல்நலனை பாதுகாப்பது நம்முடைய பொறுப்பு” என்று தெரிவித்துள்ளார்.மேலும்,பிரியாவின் இந்த உறுப்பு தான உறுதி சுதீப்பின் பிறந்தநாளை மேலும் அர்த்தமுள்ள நாளாக மாற்றியுள்ளது.
English Summary
Sudeep celebrated his birthday His wife made shocking decision same day Why