ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த பிரபல பாலிவுட் நடிகை: படப்பிடிப்புக்கு சென்ற போது விபரீதம்..!
Famous Bollywood actress jumps off a moving train
பிரபல பாலிவுட் நடிகை கரிஷ்மா சர்மா நேற்று முன்தினம் மும்பையில் உள்ள சர்ச்சுகேட் பகுதிக்கு படப்பிடிப்புக்காக புடவை அணிந்து புறநகர் ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது, உடன் வந்த தனது தோழிகளால் ரயிலில் ஏற முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பதற்றத்தில் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில், நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது முதுகு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டு, ஒரு நாள் முழுவதும் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்ட்டுள்ளார். இந்த விபத்து குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 'எனது தலை வீங்கியுள்ளது. முதுகு மற்றும் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறேன்' எனக் கூறியுள்ளார்.

அத்துடன், அவரது தோழி ஒருவரும், மருத்துவமனையில் இருந்து கரிஷ்மா சர்மாவின் புகைப்படத்தைப் பகிர்ந்து, ரசிகர்கள் பிரார்த்தனை செய்யுமாறு கோரிகை வைத்துள்ளார். இந்தச் சம்பவம் ரயில் பயணத்தின் பாதுகாப்பைக் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
English Summary
Famous Bollywood actress jumps off a moving train