ஆசிய கோப்பை 2025: 'இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நடத்த கூடாது': பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர் தந்தை கடும் எதிர்ப்பு..! - Seithipunal
Seithipunal


2025-ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 08 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில்(குரூப் A) இடம் பெற்றுள்ளன. வரும் செப்டம்பர்14-ஆம் தேதி இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. 

உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் இந்த அனல் பறக்கும் போட்டியை காண ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், இந்த போட்டியை நடத்தக் கூடாது எனவும், பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக்கூடாது என்று பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவரின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஏனெனில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கங்கள் நடத்திய தாக்குதலில் மொத்தம் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவரான சுப்ஹம் த்வேதி என்பவரின் தந்தை சஞ்சய் த்வேதி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை நடத்து கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானுடனான எந்த உறவும் இல்லை என்று இந்தியா கூறியது. அத்துடன், ரத்தமும், தண்ணீரும் ஒன்றாக பாயாது என்றும் அறிவித்தது. ஆனால், இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி நடக்கவுள்ளது. இது என்னை போன்ற பலருக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக இருக்கிறதாகவும், இதை நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடே எதிர்க்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசியலிலும், விளையாட்டிலும் பாகிஸ்தானுடன் உறவே இருக்கக்கூடாது என்று இந்தியா கூறுகிறது. ஆனால், இன்டகஹ் போட்டி நடைபெறவுள்ளது. அதனால், இந்த போட்டியை தான் எதிர்க்கிராதாகவும், மக்களின் உணர்வுகளை மனதில் வைத்துக் கொண்டு, இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று சஞ்சய் த்வேதி கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Father of Pahalgam attack victim strongly opposes India and Pakistan match in Asia Cup


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->