கல்குவாரி இடிந்து விழுந்ததில் 06 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள சோகம்..!
06 workers killed in quarry collapse in West Bengal
மேற்கு வங்கத்தில் கல்குவாரி இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிர்பும் மாவட்டத்தில் பகதூர்புர் என்ற கிராமத்தில் கல் குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த குவாரியில் வழமைபோல தொழிலாளர்கள் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக,பெரிய பாறைகள் சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்த்துள்ளது. இதில் அங்கு கல் உடைத்துக்கொண்டிருந்த பல தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர்.

இடிபாடுகளில் இருந்து பலர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்த்துள்ளனர். உடனடியாக தகவல் அறிந்து வந்த போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் மீட்புப் பணியில் இறங்கினர். அப்போது, இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ள 06 பேரின் உடல்களை கைப்பற்றியுள்ளனர்.
இந்த கோர சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், பாறைகள் சரிந்து விழுந்தது எப்படி என்று தெரியவில்லை. இங்கு சட்டவிரோத கல் குவாரிகள் இயங்கி வந்ததா.? என்பதை அறிய விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
06 workers killed in quarry collapse in West Bengal