ஏ.ஐ (AI) காலத்தில் விடைகளை விட, கேள்விகளைக் கற்பிப்பதே ஆசிரியரின் கடமை...! - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து...! - Seithipunal
Seithipunal


முன்னாள் ஜனாதிபதியும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ந்தேதி, நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், ஆசிரியப் பெருமக்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒளிந்திருக்கும் ஆற்றலையும், எதிர்கால வாய்ப்புகளையும் கண்டறிந்து, அவர்களை அறிவிலும் பண்பிலும் சிறந்து விளங்கும் நல்ல மனிதர்களாக உருவாக்கி வரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.தகவல்களுக்கான விடைகளை நொடிப்பொழுதில் வழங்கும் காலமாக தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.

குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு வேகமாக முன்னேறி வரும் இன்றைய சூழலில், மாணவர்களுக்கு விடைகளை மட்டும் கற்றுக்கொடுப்பதைத் தாண்டி, எதையும் ஆராய்ந்து சிந்திக்கவும், உண்மையைத் தேடி சரியான கேள்விகளை எழுப்பவும் கற்றுத்தருவதே ஆசிரியர்களின் மிகப்பெரிய பொறுப்பாக மாறியுள்ளது.

அறிவால் உயர்ந்து, பகுத்தறிவால் தெளிவு பெற்று, மனிதநேயத்தால் ஒன்றிணைந்து வாழும் சிறந்த சமூகத்தை உருவாக்குவதற்கான விதைகளை மாணவர்களின் மனங்களில் விதைப்போம். அறிவார்ந்த, சிந்தனைத் திறன் மிக்க, மனிதநேயம் நிறைந்த தலைமுறையை உருவாக்க ஆசிரியர் தினத்தில் உறுதியேற்போம்” என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In the era of AI duty teacher teach questions rather than answers DMK leader MK Stalin Teachers Day greetings


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->