இலங்கையில் இருந்து சென்னை வந்த காதலி.. குவைத்தில் இருந்து மகளை மீட்க பறந்து வந்த தந்தை.. குழப்பத்தில் தத்தளிக்கும் காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


இலங்கை நாட்டில் உள்ள இரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சமக்கிபுரா பகுதியை சார்ந்தவர் ஜெயிஜுலாபுதீன். இவர் குவைத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகளின் பெயர் ரிஸ்வி பாத்திமா குப்தா (வயது 21). இவர் முகநூல் செயலியை பயன்படுத்தி வந்துள்ளார். இவருக்கு முகநூலின் மூலமாக, கடலூர் மாவட்டத்தில் இருக்கும் பண்ரூட்டி அருகேயுள்ள வி.ஆண்டிகுப்பம் கிராமத்தை சார்ந்த முகமது முபாரக் (வயது 25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

முகமது முபாரக் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், முகநூலின் மூலமாக இருவரும் கருத்துக்களை வெளிப்படுத்தி வந்துள்ளனர். இவர்களின் கருத்துக்களே பின்னாளில் காதல் தூதுவனமாக மாறியதை அடுத்து, இருவரும் காதலிக்க துவங்கியுள்ளனர். நேரில் சந்திக்காமல் இருவரும் முகநூல், வாஸ்டாப் என்று காதலித்து வந்துள்ளனர்.

இதனையடுத்து காதலனை பார்க்க ஆசைப்பட்ட காதலி தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். காதலியின் கோரிக்கையை ஏற்ற காதலனும் ஆவல் கொண்டு அன்பை பரிமாறிக்கொள்ளவே, கடந்த 26 ஆம் தேதியன்று சுற்றுலா விஷாவில் இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலமாக பாத்திமா வருகை தந்துள்ளார். தனது காதலனிடம் விஷயத்தை முதலிலேயே தெரிவித்ததை அடுத்து, இருவரும் பண்ரூட்டிக்கு வந்துள்ளனர்

இந்த விஷயம் பாத்திமாவின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து, அவசர அவசரமாக குவைத்தில் இருந்து ஜெயிஜுலாபுதீன் சென்னைக்கு வருகை தந்துள்ளார். பின்னர் முகமதுவின் முகவரியை பெற்றுக்கொண்டு பண்ரூட்டிக்கு சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நேரிடையாக வி.ஆண்டிகுப்பம் பகுதிக்கு செல்கையில் காதல் ஜோடிகள் கிராமத்தில் இல்லை.. இதனையடுத்து இருவரின் புகைப்படம் மூலமாக காவல் துறையினர் காதல் ஜோடியை தேடி வந்தனர்.

இந்த நிலையில், காதல் ஜோடியில் முகமது முபாரக்கின் அலைபேசி எண்ணை வைத்து சோதனை செய்கையில் சென்னையில் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து சென்னைக்கு விரைந்த காவல் துறையினர் முபாரக்கிடம் இருந்து பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் இது தொடர்பான விசாரணையில், காதல் ஜோடிகள் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. 

மேலும், பெண்மணி மேஜராக இருந்த பட்சத்திலும், அவர் சுற்றுலா விசாவில் வந்துள்ளதால் குறைந்தபட்சமாக 15 நாட்களும், அதிகபட்சமாக 3 மாதம் மட்டுமே தங்க இயலும். இவரை தந்தையுடன் அனுப்பலாமா? காதலருடன் தங்க அனுமதி கொடுக்கலாமா? என்பது தொடர்பாக காவல் துறையினர் குழப்பத்தில் இருக்கின்றனர். தந்தை மகளை அழைத்து செல்லும் எண்ணத்தில் உறுதியாக இருந்து வரும் நிலையில், இந்த சம்பவம் இருவரின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Srilanka girl want to meet and married cudallore love boy


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal