சிவகாசி இரட்டை கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. விசாரணையில் முக்கியப்புள்ளி.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி காரணேசன் காலனி மற்றும் நேரு பகுதியில் அதிகாலை இரண்டு பேர் அரிவாளால் வெட்டப்பட்ட படுகாயத்துடன் பிணமாக கிடந்தனர். இது தொடர்பான தகவலறிந்த காவல் துறையினர்., சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வந்த நிலையில்., இவர்கள் இருவரும் சிவகாசியை சார்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் அர்ஜுன் மற்றும் முருகன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் காலையில் பணிக்கு புறப்பட்ட நிலையில்., கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

crime, crime images,

மேலும்., இந்த மர்மத்தின் முடிச்சை அவிழ்க்க தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில்., மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதை அடுத்து., மோப்ப நாயும் அங்கும் இங்குமாய் ஓடி நின்றது. இரு உடல்களும் தனித்தனியாக கண்டறிபயப்படும் பட்சத்தில்., இதனை ஒரே கும்பல் செய்திருப்பதை காவல் துறையினர் அறிந்துள்ளனர்.

இதனையடுத்து இவர்களின் அலைபேசி சோதனை செய்யப்பட்ட நிலையில்., இவர்களுக்கு யாரும் பிரச்சனை செய்யும் வகையில் இருக்கும் நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தருணத்தில்., அங்குள்ள சுமார் 8 பேரிடமும்., அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும்., பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில், கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in sivakasi murder case police investigate politician member


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->