கூடலூரில் புதுப்பிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு!  - Seithipunal
Seithipunal


 கூடலூர் மண்வயல் பகுதியில் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் புதுப்பிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீ மதுரை ஊராட்சி, மண்வயல் பகுதியில், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் சார்பில் ரூ.35.78 இலட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்  லட்சுமி பவ்யா தண்ணீரு , அவர்கள், குத்துவிளக்கேற்றி, திறந்து வைத்து பார்வையிட்டார்.

டிவி.எஸ்(TVS) மோட்டார் நிறுவனத்தின் சமூகப் பிரிவான சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை (SST), விழிப்புணர்வு, திறன் மேம்பாடு மற்றும் பயிற்சித் திட்டங்கள் மூலம் கிராமப்புற சமுதாய பணிகளை மேம்படுத்துவதில் முனைப்பாக கொண்டுள்ளதாகும். மேலும் கிராமப் புறங்களில் நிலையான வளர்ச்சியை கொண்டு வருவதற்காக உள்ளூர் சமுதாய மக்கள் மற்றும் அரசு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து பணிபுரிந்து வருகிறது. இந்த அறக்கட்டளையானது பொருளாதார மேம்பாடு சுகாதாரம் தரமான கல்வி உள் கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பராமரிப்பு சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பாதுகாப்பு 2024 2025 நிதியாண்டில், ஸ்ரீ மதுரை ஊராட்சி, மண்வயல் பகுதியில், உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில், புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் இந்த அறக்கட்டளையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்ரீ மதுரை ஊராட்சி மண்வயலில் உள்ள உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பும், சுகாதாரத்துறையின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் முக்கிய பங்குவகித்தின் அடிப்படையில், ஆரம்ப சுகாதார நிலையம் குக்கிராமங்களில் உள்ள சுகாதார துணை மையங்களை அடக்கிய பகுதிகளுக்கு சேவை செய்து வருகிறது. இந்த புதுப்பிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து அறைகளிலும் கூரை கசிவு பழுது பார்ப்பு மேற்கூரைஷீட்கள், வராண்டா சுவர் மற்றும் தரை ஓடுகள் வெளிப்புறப் பகுதிகளில் சிப்பிங் மற்றும் ப்ளாஸ் டெரிங், சித்த மருத்துவமனைக்குச் செல்லும் பாதைகள் போன்ற பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.இந்நிகழ்வின்போது, குன்னூர் சார் ஆட்சியர் / கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) சங்கீதா கூடலூர் வட்டாட்சியர் முத்துமாரி கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சலீம், சுப்ரமணி, மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In Koodalur the newly renovated government primary health center is opening


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->