காப்பர் திருடனை பிடிக்க சென்ற சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகளை கத்தியால் குத்திய கஞ்சா கும்பல்.. வெளியான பதைபதைப்பு வீடியோ காட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி சுரங்கத்தில் காப்பரை திருடி வந்த கஞ்சா வியாபாரியை மத்திய தொழில்பாதுகாப்பு படைவீரர் பிடிக்க சென்றனர். இந்த சமயத்தில்., இவரை கத்தியை மிரட்டிய கும்பல் முட்டிபோடவைத்து கத்தியால் குத்தும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பான வீடியோ காட்சியில்., கத்தியுடன் ரவுடி மிரட்டும் நிலையில்., பதறிப்போன காவல் அதிகாரியான கடலூர் மாவட்டம் நெய்வேலியை சார்ந்த தாஸ் தங்களை விட்டுவிட்டதும் படி கூறுகிறார். 

தொடர்ந்து மிரட்டி வரும் ரவுடி இவருடன் பணியாற்றி வரும் செல்வேந்திரன் என்ற காவல் அதிகாரியை கத்தியால் குத்திவிட்டு காப்பரையும் எடுத்துவிட்டு சென்றுள்ளது. மேலும் தப்பியோடிய மந்தாரங்குப்பம் பகுதியை சார்ந்த கஞ்சா மணியை விரட்டி சென்ற போது காவல் அதிகாரிக்கு துயரம் நேர்ந்துள்ளது. 

உடன் வந்திருந்த சக அதிகாரி தனது அலைபேசியில் படமாக்க., அவரையும் கத்தியால் தாக்க முயற்சித்த ரவுடி., நெய்வேலியில் உள்ள உளவுப்பிரிவு ஏட்டு ஜான் என்பவரின் பெயரை கூறிவிட்டு தப்பி சென்றுள்ளான். மேலும்., ஏட்டு ஜானின் மறைமுக பாதுகாப்பு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில்., காவல் நிலையத்திற்கு வந்து பெண் ஆய்வாளரிடம் சாவகாசமாக நலம் விசாரித்து குற்றவாளி செல்கிறார் என்று மத்திய பாதுகாப்பு படை வீரர் வருத்தம் தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in cudallore neyveli rowdy attack and injured police video trending


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal