நினைவிடத்தில் நெகிழ்ச்சி...கண்ணீர் மல்க அஞ்சலி...! - ராஜீவ் காந்தி நினைவு தினத்தில் ஸ்ரீபெரும்புதூரில் திரண்ட காங்கிரஸ் தலைவர்கள்...!
Resilience memorial tearful tribute Congress leaders gathered Sriperumbudur Rajiv Gandhi death anniversary
முன்னாள் பிரதமரும், பாரத ரத்னா விருது பெற்ற தலைவருமான ராஜிவ்காந்தியின் 35-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ராஜிவ்காந்தி நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் உருக்கமான அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.இந்த அஞ்சலி நிகழ்வில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் நிவேதித் ஆல்வா மற்றும் சூரஜ் ஹெக்டே உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும், அகில இந்திய காங்கிரஸ் மிசோரம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேச பொறுப்பாளர் டாக்டர் செல்வகுமார், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், அகில இந்திய காங்கிரஸ் தொழில் வல்லுநர்கள் பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் விஸ்வநாதன் மற்றும் ஜமால் முகமது யூனூஸ் ஆகியோரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதனுடன் தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர்கள் முருகானந்தம், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அருள்ராஜ், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் பிரிவுகளின் பொறுப்பாளர்கள், ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் சேவைகளை நினைவுகூர்ந்தனர்.
English Summary
Resilience memorial tearful tribute Congress leaders gathered Sriperumbudur Rajiv Gandhi death anniversary