விதியின் கொடூர விளையாட்டு...! 495 மதிப்பெண்கள் எடுத்த மாணவனுக்கு நேர்ந்த சோகம்...! ஏரியில் சடலமாக மீட்டபோது உறைந்துபோன பெற்றோர்...! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகிலுள்ள அரியத்துறை பகுதியை சேர்ந்த பாபுவின் மகன் அபிஷேக் (15), கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்தார். சமீபத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வில் பங்கேற்றிருந்த அவர், தேர்வு முடிந்த உற்சாகத்தில் நண்பர்களுடன் கவரைப்பேட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கிரிக்கெட் விளையாடச் சென்றிருந்தார்.

அதனைத் தொடர்ந்து அருகிலுள்ள பன்பாக்கம் ஏரியில் நண்பர்களுடன் குளிக்க இறங்கியபோது, எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று வெளியிடப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அபிஷேக் 500 மதிப்பெண்களில் 495 மதிப்பெண்கள் பெற்று கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் முதலிடம் பிடித்திருப்பது தெரியவந்தது.

உயிரிழந்த பின்னரும் கல்வியில் சாதனை படைத்த மாணவனின் வெற்றி செய்தி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை உருக்கத்தில் ஆழ்த்தியது.

அவரது நினைவாக புகைப்படத்துடன் தேர்வு மதிப்பெண் விவரங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஆசிரியர்களும் மாணவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

ஒருபுறம் மாணவனின் அபார கல்விச் சாதனை பெருமையை ஏற்படுத்தியிருந்தாலும், மறுபுறம் அவரை இழந்த குடும்பத்தினர் ஆறாத துயரத்தில் தவித்து வருகின்றனர். “முதல் மதிப்பெண் பெற்ற மகனை பாராட்ட கூட முடியாமல் போய்விட்டதே” என்ற வேதனை அப்பகுதி மக்களிடையே கண்கலங்க வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cruel game fate tragedy that befell student who scored 495 marks Parents who froze when he found dead lake


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->