வாடகை வீட்டில் ரகசிய குடித்தனம்..! 3 மாத கர்ப்பிணியான 17 வயது சிறுமி...! - பெயிண்டரை உள்ளே தள்ளிய போக்சோ சட்டம்...! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகாவை சேர்ந்த 23 வயதுடைய ரஞ்சித், பெயிண்டர் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் காதல் தொடர்பில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜனவரி 11-ந் தேதி, ஆசை வார்த்தைகள் கூறி அந்த சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் திருமணத்திற்குப் பிறகு, இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி குடும்ப வாழ்க்கை நடத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருந்ததால், அவரை மருத்துவ பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு ரஞ்சித் அழைத்து சென்றுள்ளார்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட அரசு மருத்துவர், சிறுமியின் வயது மற்றும் திருமண விவரங்களை அறிந்ததும், குழந்தை திருமணம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சங்ககிரி அனைத்து மகளிர் காவலர்களிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயினி தலைமையில் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு, சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய ரஞ்சித் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேலான விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Secret marriage rented house 17 year old girl 3 months pregnant POCSO Act that pushed painter inside


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->