மயமான பெண் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்பு.. வனப்பகுதியில் அரங்கேறிய கொடூர சம்பவம்.! ஆம்பூரில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரை அடுத்துள்ள அறங்காதுருகம் ஊராட்சி சுட்டகுண்டா கிராமத்தை சார்ந்தவர் ரேவதி (வயது 24). இவருக்கு போச்சம்பள்ளி பகுதியை சார்ந்த நபருடன்., கடந்த 4 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இந்த நிலையில்., கணவன் - மனைவிக்கு இடையேயான கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து தந்து தாயாரின் இல்லத்திற்கு வந்து தாயாருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில்., கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக ரேவதிக்கு கே.ஜி.எப் பகுதியை சார்ந்த மகேஷ் என்பவருடன் இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளது. 

மகேஷ் பெங்களூரில் பணியாற்றி வரும் நிலையில்., ரேவதி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தனது தாயரின் இல்லத்திற்கு வந்துள்ளார். இந்த நேரத்தில்., நேற்று முன்தினத்தின் போது கணவருடன் அலைபேசியில் பேச வெளியில் சென்ற நிலையில் வீட்டிற்கு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் காணவில்லை. 

died, murder, killed, suicide attempt,

இதனையடுத்து இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில்., இதே ஊரின் வனப்பகுதியருகே ரேவதி கழுத்தில் காயத்துடன் பிணமாக கிடந்துள்ளது. இது தொடர்பான தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பெண்ணின் உடலை கைப்பற்றினர். 

மேலும்., அவர் மாயமான நேரத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகைகள் மற்றும் அலைபேசி ஆகியவை மாயமாகியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ரேவதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லது நகைக்காக கொலை செய்யப்டட்டாரா? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in ambur girl murder police investigation going on


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal